Inandoutcinema - Tamil cinema news

தியேட்டர்கள் முன் ஆர்ப்பாட்டம், போலீஸ் குவிப்பு… கர்நாடகாவில் காலா படம் ரிலீஸ் இல்லை

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் காலா படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது.  படத்தை பார்த்துவிட்டு ரஜினி ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். சிங்கப்பூர், மலேசியா, அமேரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் படம் பற்றிய தங்களது கருத்தை இணையதளங்கலில் பகிர்ந்து வருகின்றனர்.
உலகமே காலா படத்தை கொண்டாடி வரும் நிலையில், கர்நாடகாவில் காலா படம் இதுவரை ரிலீஸ் ஆகவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் கர்நாடகாவுக்கு எதிரான கருத்தினை நடிகர் ரஜினிகாந்தி தெரிவிதிருந்தார்.  காலா படத்தை கர்நாடகாவில் வெளியிட கூடாது என கன்னட அமைப்புகள்  கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
மேலும் அம்மாநில திரைப்பட வர்த்தக சபை கர்நாடகாவில் காலா படத்தை வெளியிட தடை விதித்து பின்னர் அதனை திரும்பப்பெற்றது.
இதையடுத்து, கர்நாடகாவில் காலா படத்தினை  130 திரையரங்குகளிலும் வெளியாகும் என்று சி நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்பின்னர், தயாரிப்பு நிறுவனம சார்பில் நடிகர் தனூஷ்  காலா படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு கர்நாடக உயர்நீதி மன்றத்தில் வழங்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம்  திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது.
இதனால், காலா படம் கர்நாடகாவில் கண்டிப்பாக ரிலீஸ் ஆகும் என்ற நம்பிக்கையில் ரஜினி ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர்.
இந்நிலையில், கர்நாடகாவில் இன்று காலை முதல் காலா படத்தினை வெளியிடக் கூடாது என்று கன்னட அமைப்புகள் திரையரங்குகள் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அங்கு படம் வெளியாகவில்லை. தியேட்டர்களில் காலா படத்துக்கு டிக்கெட் வழங்கப்படவில்லை. நிலைமை கட்டுப்படுத்த அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. இதனால், கர்நாடகாவில் காலா படம் இன்று ரிலீஸ் ஆகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news