Inandoutcinema - Tamil cinema news

ஜொதிகா படத்தில் சூரியா, சிவகுமார்..!

சென்னை: பாலிவுட்டில் நடிகை வித்யாபாலன் நடிப்பில் ‘தும்ஹாரி சுலு’ என்ற இந்திப்படம் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆகி வசூலை அள்ளியது. வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்த படத்தில் வித்யாபாலன் ரேடியோ ஜாக்கியாக நடித்திருப்பார்.

இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய மூடிவு செய்த இயக்குனர் ராதா மோகன் அதில் நடிகை ஜோதிகாவை நடிக்க வைக்க அவரிடம் கேட்டார். கதையை கேட்ட அவர் உடனே அதில் நடிக்க ஒப்புகொண்டார்.

இந்நிலையில், படத்தின் சூட்டிங்க் இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இதில் நடிகர் சிவகுமார், கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி படப்பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் நடிகர் சூரியா, மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் பழக்குழுவினர் கலந்துகொண்டனர்.

படத்திற்கு ஏற்கெனவே ராதா மோகன் இயக்கத்தில் ‘மொழி’ படத்தில் வரும் ‘காற்றின் மொழி’ பாடலையே தலைப்பாக வைத்துள்ளனர். ரேடியோ ஜாக்கி கதை என்பதால் அந்த தலைப்பு படத்துக்கு கச்சிதமாக அமைந்துவிட்டது. 3 மாதத்தில் அனைத்து பணிகளையும் முடித்து வரும் அக்டோபர் மாதம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

படத்தை பொப்தா மிடியா ஒர்கர்ஸ் மற்றும் கிரியேட்டிவ் என்டர்டெயினர்ஸ் சார்பில் தனஞ் ஜெயன், விக்ரம் குமார், லலிதா தனஞ் ஜெயன் ஆகியோர் தயாரிக்கின்றனர். இசை காஷிப், ஒளிப்பதிவு மகேஷ் முத்துசுவாமி, படத்தொகுப்பு பிரவின் கே.எல்., பாடல்கள் மதன் கார்க்கி ஆகியோ கவனிக்கின்றனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news