September 21, 2018
Inandoutcinema - Tamil cinema news

21-வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் ராமின் ‘‘பேரன்பு’’

சென்னை: மலையாள நடிகர் மம்மூட்டி, நடிகை அஞ்சலி, தங்க மீன்கள் சாதனா நடித்து ராம் இயக்கிய படம் ‘பேரன்பு’. கடந்த மாதம் ரிலீஸ் ஆகி பெரும் வரவேற்ப்பை பெற்றது.

இந்தபடம் ரிலீஸ் ஆகும் முன்னரே சர்வேதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் 21-வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் ஆசியாவின் முதல் பிரத்யேக காட்சியில் பேரன்பு படம் திரையிடப்பட்டது.

ஷாங்காய் ஹாங்கௌ ஜின்யி சினிமா அரங்கில் நடைபெற்ற முதல் காட்சி சீன பார்வையாளர்களால் அரங்கு நிறைந்தது. திரைப்படம் முடிந்த பின் அனைத்து பார்வையாளர்களும் எழுந்து நின்று தங்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர். திரையரங்கிற்கு வெளியே காத்திருந்த இயக்குநர் ராம், தங்கமீன்கள் சாதனா மற்றும் தயாரிப்பாளர் P L தேனப்பன் ஆகியோரிடம் பார்வையாளர்கள் தங்கள்
அன்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.

நேற்று (17-ம் தேதி) பேரன்பு திரைப்படத்தின் இரண்டாவது காட்சி ஷாங்காய் நகரின் அரோரா இன்டர்நேஷனல் சினிமா அரங்கில் திரையிடப்பட்டது. நாளை 19ம் தேதி 3 காட்சிகள் திரையிடப்பவுள்ளது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news