September 23, 2018
Inandoutcinema - Tamil cinema news

2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியா? – கமல் ஹாசன் விளக்கம்

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் தனது கட்சி பணிகள் தொடர்பாக நேற்று முன்தின் டெல்லி சென்றிருந்தார். அப்பணிகளை முடித்துகொண்டு பின்னர் அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்தார்.

இந்நில்லையில், சற்று முன் சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது, ‘மரியாதை நிமித்தமாகவே ராகுலையும், சோனியாவையும் சந்தித்தேன். கெஜ்ரிவால் பெங்களூரில் இருப்பதால் அவரை சந்திக்க முடியவில்லை.

நீங்கள் நினைப்பது போன்று கூட்டணி பற்றி எதுவும் பேசவில்லை. தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து பேசினோம். காங்கிரஸ் தலைவர்களை சந்தித்ததால் நான் ஒரு வழிப்பாதையில் செல்கிறேன என்று நினைக்க வேண்டாம். அரசியலில் எனது பாதை எது? என்பதை நான் ஏற்கெனவே முடிவு செய்து விட்டேன்.

காவிரி பிரச்னையில் மத்திய அரசின் முடிவும் ஒவ்வொரு முறையும் வித்தியாசமாக உள்ளது. அதனை ஒவ்வொரு முறையும் விமசித்துகொண்டே தான் இருக்கிறோம். தொடர்ந்து விமர்சிப்போம். காவிரி ஆணையத்தை முறையாக செயல்படுத்த எல்லாவிதமான அழுத்தங்களையும் தரவேண்டும்.

காவிரி விவகாரத்தில் வெற்றி விழா கொண்டாட வேண்டியது விவசாயிகள் தான்நாம் அதனை வழியவேண்டும். என்றார். வரும் நாடாளுமன்ற தேர்தலி உங்கள் கட்சி போட்டியிடுமா என்று நிருபர்கள் கேட்டதற்கு அது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசி விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news