September 21, 2018
Inandoutcinema - Tamil cinema news

2019 தள்ளிப்போகும் 2.0 ரிலீஸ்?- என்ன தான் நடக்குது

சென்னை: VFX பணிகள் இன்னும் முடிவடையாததால் 2.0 படத்தின் ரிலீஸ் 2019க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2010ல் வெளியான இயந்திரன் படத்துக்கு பிறபு இயக்குனர் ஷங்கர் – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் தொடங்கப்பட்ட படம் 2.0.
சுமார் 450 கோடி பொருட்செலவில் உருவாகி வரும் இந்த படம் கடந்த 2015ம் ஆண்டு சூட்டிங்க் தொடங்கப்பட்டது.

2 ஆண்டுகள் படபிடிப்பு, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு படத்தின் பாடல் வெளியீடு துபாய்யில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதையடுத்து படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது. கடந்த தீபாவளிக்கும் படம் ரிலீஸ் ஆகும் என்று ரசிகர்கள் காத்திருந்த நிலையில் பல்வேறு காரணங்களால் படம் தள்ளிப்போனது.

அத்தன் பின்னர், அக்‌ஷகுமாரின் ‘பேட் மேன்’ படம். சினிமா ஸ்டிரைக் என்று படத்துக்கு பல தடைகள் வந்தபோதிலும் இறுதியில் படத்தில் VFX பணிகள் உள்ளன அதன் காரணமாகவே படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை என்று தயாரிப்பு நிறுவனமே அறிவித்தது.

இறுதியாக வரும் ஆகஸ்ட் மாதம் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டிருந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது அடுத்த ஆண்டு தான் படம் ரிலீஸ் ஆகும் என்று தெரியவந்துள்ளது. படத்தின் VFX பணிகள் இன்னும் சில வேலைகள் பாக்கி இருப்பதால் இந்த ஆண்டு படம் ரிலீஸ் செய்ய வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news