September 25, 2018
Inandoutcinema - Tamil cinema news

இணையத்தில் வெளியான 2.0 பட காட்சிகள். எந்திரன் 2 படம் தள்ளி போகிறதா ? விவரம் உள்ளே

2.0

பிரம்மாண்ட இயக்குனரான சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படம்தான் எந்திரன் படத்தின் இரண்டாம் ஆகும். இந்த படத்தை ரூ.450 கோடி பொருட்செலவில் உருவாகிவருவது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஏமி ஜாக்சனும், வில்லனாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்‌ஷய்குமார் நடித்துள்ளார்.

இந்த படத்தின் பாடல்களை கடந்த வருடம் துபாயில் பிரம்மாண்டமாக வெளியிட்டனர். எந்திரன் படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள், வெளிநாட்டு ஸ்டுடியோக்களில் நடந்து வருகிறது. இந்தப் பணிகள் முடியாமல் தாமதமாகி வருவதால் இரண்டு மூன்று முறை படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தும், படக்குழுவால் திட்டமிட்டபடி படத்தை திரைக்கு கொண்டு வர முடியவில்லை.

இறுதியாக நவம்பர் 29–ந்தேதி படம் திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர். தற்போது கிராபிக்ஸ் வேலைகள் தாமதமாகி வருகிறது என கூறப்படுகிறது. இதனால் இந்த ரிலீஸ் தேதியும் தள்ளிப்போகலாம் என்றும் பேசப்படுகிறது. ரசிகர்களை உற்சாகப்படுத்த அவ்வப்போது இந்தப் படம் தயாரான வீடியோ காட்சிகளை படக்குழுவினர் வெளியிடுகின்றனர்.

ஏற்கனவே ஒரு காணொளி வெளியானது போல் தற்போது எந்திரனாக நடிக்கும் ரஜினிகாந்த் ஸ்டைலாக நடந்து வருவது போன்றும் பாடல் காட்சியில் எமிஜாக்சன் நடன குழுவினருடன் இணைந்து ஆடுவது போன்றும் வீடியோ காட்சிகளை இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news