இணையத்தில் வெளியான 2.0 திரைப்படம் – அதிர்ச்சியில் படக்குழு – விவரம் உள்ளே

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள படம் 2.0. நீண்ட காலங்களாக இந்த படத்திற்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் இந்த படத்தின் வெளியீடு தேதி மற்றும் டீசர் போன்றவை வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார்.

இவர்களுடன் சுதன்சு பாண்டே, ரியாஸ் கான், கலாபவன் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்தப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. பிரமாண்டமாக அதிக பொருட் செலவில் உருவாகியிருக்கும் இப்படத்தை இணையத்தில் வெளியிடக்கூடாது என்பதற்காக லைகா நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ள 2.0 படத்தை முறைகேடாக 12 ஆயிரத்து 567 இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையதளம், தன்னுடைய இணையதள முகவரியில் உள்ள எழுத்துகளை மாற்றம் செய்து தொடர்ச்சியாக புதிய படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த மனு நீதிபதி சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, புதிய திரைப்படங்களை இணையதளங்களில் வெளியிடக் கூடாது என பல முறை நீதிமன்றம் உத்தரவிட்டாலும், அந்த உத்தரவை சுட்டிக்காட்டியே தமிழ் ராக்கர்ஸ் சவால்விட்டு புதிய படங்களை வெளியிட்டு விடுவதாக லைகா நிறுவனம் சார்பில் புகார் கூறப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதி, இணையதள முகவரியில் மாற்றம் செய்த தமிழ் ராக்கர்ஸ்க்கு சொந்தமான சுமார் 2000-க்கும் மேற்பட்ட இணையதளங்கள் உட்பட 12,567 இணையதளங்களில் 2.0 படத்தை வெளியிடத் தடைவிதித்து இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில் படம் வெளியான முதல் நாளன்றே நீதிமன்ற தீர்ப்பையும் மீறி தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அதை பெருபாலான ரசிகர்கள் இணையத்தில் பதிவிறக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news