September 23, 2018
Inandoutcinema - Tamil cinema news

150க்கும் மேற்பட்ட கதைகளை நிராகரித்த நடிகை அதிதி பாலன். விவரம் உள்ளே

கடந்த வருடம் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் அருவி ஆகும். அதில், நடித்த அதிதி பாலன் தன்னுடைய முதல் படம் போல் இல்லாமல் மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் பெற்றார்.

இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றதால் அவருக்கு இதன் மூலம் அதிகமான பட வாய்ப்புகள் வந்துகொண்டே இருக்கிறது. இந்த படத்தின் மூலம் அவருக்கு பல விருதுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவருக்கு சில முன்னணி இயக்குநர்கள் முதல் பல அறிமுக இயக்குநர்கள் வரை கதை சொல்லி வருகிறார்கள். கடந்த சில மாதங்களில் மட்டும் 150-க்கும் மேற்பட்ட கதைகளை நடிகை அதிதி பாலன் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் எந்தக் கதையும் பிடிக்காமல் அனைத்து கதைகளையும் வேண்டாம் என்று நிராகரித்துள்ளார். தனக்குக் கிடைத்த நல்ல பெயரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார். அவரின் நண்பர்கள் சிலர், எந்த படங்களையும் ஏற்காமல் இருந்தால் எல்லோரும் உன்னை மறந்து விடுவார்கள்’ என்று அறிவுரை அளித்துள்ளார்கள். அதற்கு, இன்னும் 2 ஆண்டுகள் ஆனாலும் சரி. எனக்கு பிடித்த கதை வரும் வரை நான் காத்திருப்பேன் என்று உறுதியாக கூறியிருக்கிறார் நடிகை அதிதி பாலன்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news