September 20, 2018
Inandoutcinema - Tamil cinema news

12 மணிநேரம் கூண்டுக்குள் அடைப்பட்ட நடிகை மல்லிகா ஷெராவத் ஏன் தெரியுமா ?

1946 ஆம் ஆண்டு முதல் பிரான்ஸ் நாட்டில் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. பிரான்ஸ் நாட்டில் கேன்னஸ் நகரில் 71வது திரைப்பட விழா கோலாகலமாக துவங்கியது. இந்த விழாவிற்கு உலக முழுதும் உள்ள பல திரை பிரபலங்கள் வந்து கலந்து கொள்வார்கள். இதில் ஐஸ்வர்யா ராய், ஹ்யுமா குரேஷி, தீபிகா படுகோன், கங்கனா ரனாவத், சோனம் கபூர், தனுஷ் போன்ற பலர் கலந்துகொண்டனர். இதில், பிரபல பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் தன்னை 12 மணிநேர கூட்டுக்குள் அடைத்துக்கொண்டு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக மற்றும் வன்முறைகுறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்திவருகிறார்.

சர்வதேச அரசு சாரா அமைப்பான ‘Free A Girl India’-வின் தூதராகச் செயல்படும் இவர், தன்னை 12×8 அளவுகொண்ட சிறிய ஜெயிலில் தன்னை அடைத்துக்கொண்டுள்ளார். இதுகுறித்து மல்லிகா, ” கேன்ஸ் திரைப்பட விழாவில் இது என்னுடைய 9-வது வருடம். இந்த விழாவில் விழிப்பு உணர்வு ஏற்படுத்தினால், உலகத்தின் எந்தவொரு மூலைக்கும் சென்று சேரும். இப்படி என்னை ஒரு சிறிய கூட்டுக்குள் அடைத்துக்கொள்வதால், சிறு பிள்ளைகள் வன்முறையின் காரணமாக எப்படிப்பட்ட கொடூர வதைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்பதை உணர முடிகிறது. இது, இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் பல்வேறு பிரச்னைகளுக்கு பெண்களும் குழந்தைகளும் பலியாக்கப்படுகிறார்கள். அவற்றுக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என நடிகை மல்லிகா சேராவத் கூறினார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news