September 23, 2018
Inandoutcinema - Tamil cinema news

விஜய் சேதுபதியுடன் மூன்றாவது முறையாக இணைந்த பிரபல இயக்குனர். விவரம் உள்ளே

தமிழ் சினிமாவில் தனது வசீகர நடிப்பால் அயராது உழைப்பாலும் முன்னேறியவர் விஜய் சேதுபதி. அதுமட்டுமின்றி திரைத்துறையில் சக நடிகர்களிடம் பாகுபாடின்றி பழகும் நடிகர் என அனைவராலும் பாராட்டப்படுபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகும். செக்க சிவந்த வானம், ஜூங்க, சீதக்காதி, 96, சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்கள் அவரது நடிப்பில் உருவாகி வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்திற்க்கான பூஜை போடப்பட்டுள்ளது. பண்ணையாரும் பதமினியும், சேதுபதி ஆகிய படங்களை இயக்கிய அருண் குமார், மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்து இந்த படத்தையும் இயக்கவிருக்கிறார். பெயரிடப்படாத இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடிக்கவிருக்கிறார். லிங்கா என்ற புதுமுக நடிகர் விஜய் சேதுபதிக்கு வில்லனாக நடிக்கிறார். மேலும் யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைப்பது கூடுதல் சிறப்பம்சமாகும். இந்த படத்தின் பூஜையின் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news