விஜய் சேதுபதியின் க/பெ.ரணசிங்கம் ஓடிடி-யில் நேரடி ரிலீசா?….

பெ.விருமாண்டி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் க/பெ.ரணசிங்கம். கதாநாயகியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் வருகிறார். கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, வேல.ராமமூர்த்தி, ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பொன்மகள் வந்தாள், பெண்குயின் படங்களை போன்று இந்தப்படமும் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதன் இயக்குனர் விருமாண்டி அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

க.பெ ரணசிங்கம் பட போஸ்டர்

அவர் கூறியதாவது: க/பெ.ரணசிங்கம் படம் திரையரங்குகளில் வெளியான பின்பு தான் ஓடிடியில் வெளிவரும். படத்தின் மீதமுள்ள பணிகள் நிறைவடைந்த பிறகு ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என விருமாண்டி தெரிவித்துள்ளார்.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news