Inandoutcinema - Tamil cinema news

வடகொரியாவே நட்பாகிடுச்சு… கார்நாடகா இன்னும் ஆகலையே -சீனு ராமசாமி

சென்னை : அணு ஆயுத உற்பத்தி, கண்டம் விட்டு கண்டம் தாண்டும் ஏவுகணை என உலக நாடுகளிடம் கெத்துகாட்டி வந்த வடகொரியா சமீபத்தில்  ‘எதுக்குசார் இந்த சண்டை போரப்போ என்னத்த கொண்டு போக போறோம்’ என்று ஒருபடி இறங்கி வந்து அண்டை நாடான தென் கோரியாவுடன் கைகுலுக்கி நட்பு பரிமாறியது.

ஆனால், காவிரி நீரை காரணம் காட்டி  அண்டை மாநிலமான கர்நாடகாவுக்கு – தமிழ்நாட்டுக்கும் இடையே அரசியல் செய்து வருகின்றனர் ஆளும் கட்சியினர்.

டிவிட்டரில் இது பற்றி கருத்து தெரிவித்துள்ள இயக்குனர் சீனுராமசாமி ‘‘வடகொரியா தென்கொரியா இரு நாடுகளே இணைந்து விட்டது, இரு மாநிலத்தின் மக்கள் நட்போடு இருப்பதை உணராமல் காவேரி மேலாண்மையை அரசியல் லாபம் கிட்டிவிடும் என்கிற மூட நம்பிக்கையில் தள்ளிப்போடுவது நியாயமா? இணைவு தான் லாபம்.

பிரிவு இருவருக்கும் வீழ்ச்சியன்றோ?’’ என்று கேள்வி எழுப்பி உள்ளார். அரசியல், சாமானியர்களின் பிரச்சனை குறித்து அவ்வபோது தனது கருத்தை பதிவு செய்து வரும் இயக்குனர்  இந்த பதிவுக்கு ஆதரவு தெரிவித்து பதில் கருத்தை பகிர்ந்துள்ளனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news