September 22, 2018
Inandoutcinema - Tamil cinema news

ராதிகா, குஷ்பு பாணியை பின்பற்றும் நடிகை நயன்தாரா. விவரம் உள்ளே

தற்போதுள்ள தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகள் பலரும் தயாரிப்பாளராக உருவெடுத்து வருகின்றனர். ஏற்கனவே முன்னாள் கதாநாயகியான ராதிகா சரத்குமார், குஷ்பு ஆகியோர் பல படங்களை தயாரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. நடிகை நயன்தாரா, ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை காப்பாற்ற போராடும் கலெக்டராக, அறம் திரைப்படத்தில் நடித்தார்.

இந்த படம் மாபெரும் வெற்றியையும், மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பையும் பெற்றது. அந்த படத்தை நடிகை நயன்தாரா, தனது மானேஜர் பெயரில் சொந்தமாக தயாரித்தார் என பேசப்பட்டது. தொடர்ந்து இன்னொரு படத்தையும் அவர் தயாரித்து நடிக்க இருக்கிறார் என கூறப்பட்டது. அதே போல் நடிகை சமந்தாவும் திருமணத்திற்கு பிறகு தயாரிப்பில் கவனம் செலுத்துகிறார். கன்னடத்தில் வெற்றி பெற்ற யு டர்ன் படத்தை தமிழ், தெலுங்கில் தயாரித்து அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். திருமணத்துக்கு பின் நடிக்காமல் ஒதுங்கியிருந்த நஸ்ரியா தற்போது தயாரிப்பாளராக உருவாகியிருக்கிறார். பட தயாரிப்பில் ஈடுபடப்போவதாக நடிகை சிம்ரனும் ஏற்கனவே அறிவித்து இருக்கிறார். தமிழன் பட டைரக்டர் எஸ்.மஜித்தை இயக்குநராக வைத்து தமிழில் படம் தயாரிக்கிறார் நடிகை சதா. இவர்கள் தவிர மேலும் சில நடிகைகளும் விரைவில் தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கப் போகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தியில் அனுஷ்கா சர்மா, தியா மிர்ஸா, அமிஷா படேல், பிரியங்கா சோப்ரா, பரீத்தி ஜிந்தா, லாரா தத்தா, ஷில்பா ஷெட்டி, ஜுஹி சாவ்லா, பூஜா பட், மனிஷா கொய்ராலா போன்ற நடிகைகள் சொந்தமாக படங்கள் தயாரித்து அவற்றில் கதாநாயகிகளாக நடித்தும் வருகின்றனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news