September 25, 2018
Inandoutcinema - Tamil cinema news

ரஜினியின் புதிய படத்தில் விஜய் சேதுபதியா ? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ரஜினிகாந்த் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கும் ‘காலா’ படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரித்திருக்கிறார். லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் படத்தை வெளியிட இருக்கிறது. கபாலி திரைப்படத்திற்கு பிறகு ரஜினியும் ரஞ்சித்தும் இணையும் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ள படம் காலா.

ரஜினி நடித்த காலா படம் வருகிற ஜூன் 7ம் தேதியில் பிரமாண்டமாக உலகெங்கும் ரிலீஸ் ஆகிறது என நடிகர் தனுஷ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். அதை தொடர்ந்து ரஜினி நடிக்கப்போகும் படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கப்போவதாக சன் பிச்சர்ஸ் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி இருந்தது. பின்னர் ரஜினி, கார்த்திக் சுப்ராஜ் கூட்டணியில் உருவாகும் படத்திக்கு நம்ம அனிருத் இசையமைக்க இருக்கிறார். இதனால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார். மேலும் இது பற்றிய ருசிகர தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அந்த படத்தின் வில்லன் கதாப்பாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாக தகவல் கசிந்தது. இதுவரை வந்த கார்த்திக் சுப்புராஜ் படங்களில் மெர்குரி படத்தை தவிர விஜய் சேதுபதி இல்லாமல் இருந்ததில்லை. அதனால் இந்த படத்திலும் விஜய் சேதுபதி இருப்பார் என கூறப்பட்டது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக சான் பிச்சர்ஸ் தனது அதிகாரப்போர்வ ட்விட்டர் பக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இதனை விஜய் சேதுபதி ரசிகர்கள் இணையதளத்தில் வைரலாக பரப்பி வருகின்றனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news