September 21, 2018
Inandoutcinema - Tamil cinema news

மீண்டும் கவிதை மொழியில் காவிரி பற்றிய கருத்தை வெளியிட்ட நடிகர் விவேக்

காவிரி பிரச்சனை தமிழகத்தில் தலை தூக்கியது. மத்திய மாநில அரசுகளுக்கு கடும் எதிர்ப்பும், போராடும் தமிழர்களுக்கு நாளுக்கு நாள் பெருகி கொண்டே வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நாளை வள்ளுவர் கோட்டத்தில் நடிகர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடிகர் விவேக் தனது அதிகாரப்பூர்வ விட்டர் பக்கத்தில் கலாய்த்து கவிதை எழுதி வெளியிட்டார். அதில் நாங்கள் கேட்பது நீரப்பா! நீங்கள் தருவதோ சூரப்பா! அண்ணன் தம்பிகள் நாமப்பா! நம்மை பிரிப்பது நீராப்பா? அப்பப்பா போதும்ம்ம்ம்ம்பா! அன்னை காவிரி வேணும்பா என பதிவிட்டுள்ளார். அதை தொடர்ந்து காவிரிக்காக அழியும் விவசாயத்திற்காக தவிக்கும் தமிழ் உழவனுக்காக குரல் கொடுப்பது நம் உரிமை. அதே நேரம் அண்டை சகோதரருடன் அங்கே இணைந்து வாழும்பல லட்சம் தமிழ் குடும்பங்களின் பாதுகாப்பை உறுதி செய்வது நம் கடமை. எந்த சூழலில் நம் சொல் செயல் அமைதிக்கு ஊறுவிளைக்க கூடாது என்றும் பதிவிட்டார். இந்நிலையில் மீண்டும் ஒரு கவிதையை நடிகர் விவேக் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் நடிகர் விவேக் கூறியிருப்பதாவது : காவிரி நீர் பெறுதல் நம் உரிமை; ஆனால் உள் நாட்டு ஆறுகளை மீட்டெடுப்பதும் நம் கடமை.மரங்களை வெட்டியதும், ஏரி குளம் தூர் வாராததும் நம் மடமை. எங்கு காணினும் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள், கொடுமையிலும் கொடுமை என பதிவிட்டுள்ளார். இவரது கருத்திற்கு ரசிகர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்தனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news