Inandoutcinema - Tamil cinema news

மிஸ்டர் சந்திரமௌலி படத்தின் ட்ரைலர் செய்த பிரம்மாண்ட சாதனை. விவரம் உள்ளே

இயக்குனர் திரு, கார்த்திக் மற்றும் கௌதம் கார்த்திக் வைத்து, மிஸ்டர் சந்திரமௌலி என்ற படத்தை இயக்கியுள்ளார். இதற்கு முன்னதாக நடிகர் விஷாலை வைத்து, தீராத விளையாட்டு பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்த மூன்று படங்களிலும் விஷால் கதாநாயகனாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் முறையாக வேறு நடிகருடன் கைகோர்த்துள்ளார் இயக்குனர் திரு. மிஸ்டர் சந்திரமௌலி என பெயரிட்டுள்ள இந்த படத்தில் ரெஜினா கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் நவரசம் நாயகன் கார்த்திக் நடித்திருப்பது, கூடுதல் சிறப்பம்சம் ஆகும். இப்படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவும், விக்ரம் வேதா படத்தின் இசையமைப்பாளரான சாம் சி.எஸ் இணைந்திருப்பது படத்திற்கு வலு சேர்க்க கூடியதாக அமைந்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் பாடல் மற்றும் ட்ரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகிய 24 மணிநேரத்தில் 5 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. மிஸ்டர் சந்திரமௌலியின் ஏற்கனவே 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருந்தது. தற்போது இந்த படத்தின் ட்ரைலர் [இன்று காலை] மூன்று மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news