September 22, 2018
Inandoutcinema - Tamil cinema news

மாபெரும் சாதனையை நூலிழையில் தவறவிட்ட காலா திரைப்படம். சோகத்தில் ரசிகர்கள்

ரஜினிகாந்த் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கும் ‘காலா’ படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரித்திருக்கிறார். லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் படத்தை வெளியிட இருக்கிறது.

கபாலி திரைப்படத்திற்கு பிறகு ரஜினியும் ரஞ்சித்தும் இணையும் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ள படம் காலா. காலா இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ளது. வெளியானது முதல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரை பிரபலங்கள் பலரும் அவரது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் நேற்றே சிறப்புக்காட்சிகள் இப்படத்திற்கு தொடங்கிவிட்டது. இந்நிலையில் இப்படம் ப்ரீமியரில் தற்போது வரை அரை மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

அதாவது இந்திய மதிப்பில் காலா திரைப்படம் ரூ 3.2 கோடியை தாண்டியுள்ளது. இந்த வசூல் கபாலியை விட குறைவு என்றாலும், புதன் கிழமை அமெரிக்காவில் ரிலிஸாக இந்திய படங்களில் காலா தான் அதிக வசூல் என கூறப்படுகின்றது. காலா திரைப்படத்தின் சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news