மாங்காய்க்கு முத்தம் கொடுத்து விளையாடும் அமலா பால்!

தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை இரண்டு வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வந்தனர். முன்னாள் கணவருக்கு திருமணம் ஆன நிலையில் மும்பையை சேர்ந்த பவ்னிந்தர் சிங் என்ற பாடகரை காதலித்து திருமணம் செய்துகொண்டாட்டதாக புகைப்படம் வெளியாகி வைரலானது.

ஆனால், அதை பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லாமல் வாய் திறக்காமல் தனக்கும்  அந்த விஷயத்துக்கும் துளி கூட சம்மதம் இல்லாதது போன்று அமலா பால் நடந்துகொண்டடார். இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கினால் வீட்டிற்குள் இருந்து வரும் அமலா பால் திடீரென கொஞ்சம் தூறல் போட்டதில் ஆட்டம் போட்டு தோட்டத்தில் இருந்த மாங்காய்களுக்கு முத்தம் கொடுத்து ஆட்டம் ஆடிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news