Inandoutcinema - Tamil cinema news

மன்சூர் அலிகான் உயிரோட இருக்காரா இல்லையா ? கண்ணீருடன் சிம்பு

காவிரி மேலாண்மை வாரியம் மத்திய அரசு அமைக்காததை கண்டித்து சென்னை வந்த மோடிக்கு கருப்பு கொடி காட்டும்  போராட்டம் நடைபெற்றது.சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனைய வருகை பகுதியில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்திய இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், சீமான், ராம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் ஒரு திருமண மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதற்கிடையில், சீமான் தங்க வைக்கப்பட்டுள்ள மண்டபத்திற்கு வந்த நடிகர் மன்சூர் அலிகான் உள்ளே செல்ல முயன்றார். அனுமதி மறுக்கவே, அவர் போராட்டத்தில் ஈடுப்பட்டார்.

பின்னர் அவரை கைது செய்தனர். மன்சூர் அலிகான் ஜாமின் கேட்டும் அவருக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில் மன்சூர் அலிகானை சிறையில் அடைத்தது ஏன் என தெரிந்து கொள்ள ஆணையர் அலுவலகத்துக்கு நடிகர் சிம்பு  இன்று காலை வருகை தந்தார். அப்போது நடிகர் சிம்பு கூறியதாவது : சென்னையில் போராட்டத்தின் போது காவல் துறையினரை தாக்கியதில் எனக்கு உடன்பாடில்லை.

ஐ.பி.எல். போராட்டத்தின் போது கடமையை செய்ய வந்த காவலரை தாக்கியது தவறு, அதற்கு முன் என்ன நடந்தது என தெரியாது. மன்சூர் அலிகான் தவறாக பேசியிருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்;

மன்சூர் அலிகான் கைது சரியென்றால் அவரை போல் பேசிய அனைவரையும் கைது செய்ய வேண்டும். மன்சூர் அலிகானுக்கு சிறுநீரகத்தில் கல் இருக்கிறது. அதை பற்றி கவலைபடாமல் தமிழர்களுக்காக போராடினர். அவர் மகனிடம் நான் பேசுகையில் அப்பா உயிரோட இருக்கிறாரா இல்லையா என்றே தெரியவில்லை என கூறி அழுகிறார். அவருக்காக கமிஷனர் அலுவலகத்தில் மனுகொடுக்க வந்தேன் என நடிகர் சிம்பு கூறினார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news