September 22, 2018
Inandoutcinema - Tamil cinema news

மணிரத்னம் படத்தில் மெர்சலான கெட்டப்பில் விஜய் சேதுபதி. புகைப்படம் உள்ளே

திரைத்துறையில் சக நடிகர்களிடம் பாகுபாடின்றி பழகும் நடிகர் என அனைவராலும் பாராட்டப்படுபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. செக்க சிவந்த வானம், ஜூங்க, சீதக்காதி, 96, சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்கள் அவரது நடிப்பில் உருவாகி வருகிறது. தற்போது செக்க சிவந்த வானம் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துவருகிறார்.

இப்படத்தில் அருண் விஜய், பிரகாஷ் ராஜ், தியாகராஜன், சிம்பு, அர்விந்த் சாமி, விஜய்சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் , மாடல் டயானா எர்ரப்பா மற்றும் பலர் நடிக்கின்றனர். ஏற்கனவே சிம்பு, அரவிந்த் சாமி, அதிதி ராவ் போன்றவர்களின் கெட் – அப் போட்டோக்கள் வெளியாகி வைரலானது. மிக வேகமா நடந்து வந்த இந்த படத்தின் படப்பிடிப்புகள், சினிமா தயாரிப்பாளர்களின் போராட்டத்தால் நிறுத்தி வைக்கப்பட்டது. இப்போது சினிமா வேலைநிறுத்தம் முடிவடைந்ததை தொடர்ந்து மணிரத்னத்தின் ‘செக்க சிவந்த வானம்‘ படத்தின் படப்பிடிப்பும் நேற்று துவங்கியது. இந்த படப்பிடிப்பில் விஜய் சேதுபதி முதன் முதலாக கலந்துகொண்டுள்ளார். இவரின் போட்டோவை ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news