பொன்மகள் வந்தாள் படத்தை ஓடிடி ரிலீசுக்கு முன்பே லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ் – படக்குழு அதிர்ச்சி

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. அறிமுக இயக்குனர் ஜெ.ஜெ.பெட்ரிக் எழுதி இயக்கி உள்ளார். ஜோதிகா இப்படத்தில் வக்கீலாக நடித்துள்ளார். மேலும் பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன், தியாகராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 
இப்படத்திற்கு 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் இப்படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டனர். அதன்படி மே 29 (இன்று) 12:00 AM மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஜோதிகா

ஆனால் படத்தை அதற்கு முன்பாகவே வெளியிட்டனர். காரணம், படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் திருட்டுத்தனமாக லீக் செய்ததால், வேறு வழியின்றி படத்தை திட்டமிட்டதற்கு  முன்னதாகவே ஓடிடி-யில் ரிலீஸ் செய்தனர். அதுவும் ஓடிடி தளத்தில் என்ன தரத்தில் வெளியானதோ, அதேபோன்று தமிழ் ராக்கர்ஸிலும் வெளியானதால் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் தியேட்டரில் வெளியாகும் படங்களை திருட்டுத்தனமாக வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளது. தற்போது ஓடிடி-யில் ரிலீசாகும் படங்களையும் திருட்டுத்தனமாக வெளியிட்டு வருவதால் திரைத்துறையினரை கலக்கமடைய வைத்துள்ளது.. இதற்காக சினிமா துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் திருட்டுத்தனமாக படங்கள் வெளியாவதை தடுக்க முடியவில்லை.    

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news