பொன்னியின் செல்வனுக்காக தோற்றத்தை மாற்றிய ஜெயம் ரவி

ஜெயம் படம் மூலம் கடந்த 2003-ம் ஆண்டு தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ஜெயம் ரவி. இந்த படத்தை அவரது அண்ணன் ராஜா இயக்கி இருந்தார். இதை தொடர்ந்து எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து கமர்ஷியல் ஹீரோவாக உயர்ந்தார். அதுவரை கமர்ஷியல் படங்களில் நடித்து வந்த ஜெயம் ரவி, பின்னர் பேராண்மை, ஆதி பகவன் போன்ற படங்களின் மூலம் ஆக்‌ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்தார்.

ஜெயம் ரவி

தற்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஜெயம் ரவி அருள்மொழிவர்மன் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்காக சில மாதங்கள் தீவிர உடற்பயிற்சி செய்து தன்னை தயார் படுத்திக்கொண்டார். தற்போது தாய்லாந்தில் இவர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் லக்‌ஷ்மண் இயக்கும் பூமி, அகமது இயக்கும் ஜன கன மன போன்ற படங்களிலும் ஜெயம் ரவி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news