September 25, 2018
Inandoutcinema - Tamil cinema news

பொது மக்கள் சாவதற்கு தமிழக அரசே பொறுப்பு – ரஜினி

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் முன்னெடுத்த போராட்டம் இன்று 100-ஆவது நாளை எட்டியது. போராட்டத்தின் மீது மத்திய , மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்க இன்று முழு அடைப்பு போராட்டமும் நடத்தப்பட்டது. அப்போது தூத்துக்குடி ஆட்சியரகத்தை முற்றுகையிட பேரணியாக மக்கள் செல்ல முடிவு செய்தனர். ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக வளாகத்தை 18 கிராம மக்கள் முற்றுகையிட முயன்றனர். அப்போது மக்கள் மீது கோர தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால பலர் பாதிக்கப்பட்டனர். ஒரு சில உயிரிழப்புகளும் நடைபெற்றது. இந்நிலையில் இது பற்றி நடிகர் ரஜினி ரஜினி தன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : மக்களின் உணர்வுகளை மதிக்காத இந்த அரசின் அலட்சியப்போக்கின் விளைவாக இன்று பொதுமக்கள் சுடப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது. நடந்த வன்முறை மற்றும் பொது ஜன உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பு என நடிகர் ரஜினி கூறியுள்ளார்.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news