புதிய ஐபோன்கள் அறிமுகம்!

ஆப்பிள் நிறுவனம் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் புதிய போன்களை வெளியிட்டு வருகிறது. இதையொட்டி, அமெரிக்காவின் கியூபர்டினோ நகரில் உள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ஐபோன் 11, ஐபோன் 11 புரோ மற்றும் ஐபோன்11 புரோ மேக்ஸ் ஆகிய மாடல்களை ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக் அறிமுகம் செய்துவைத்தார்.

ஐபோன் 11 மாடல், 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா எக்ஸ்.டி.ஆர் டிஸ்பிளே கொண்டது. நிறம் மாறாது, அழுக்கடையாது, ஸ்கிராட்ச் ஏற்படாது என்பன போன்ற பல சிறப்பம்சங்கள் இதில் உள்ளன.

கேமராவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஐபோன் 11 மாடலின், செல்பி கேமரா 12 எம்பி தரம் கொண்டது. இதில் zoom, autoflash, face detection, touch to focus போன்ற வசதிகள் உள்ளன. ஸ்லோமோஷனில் செல்பி எடுக்கும் வசதி முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஐபோன்-11 எல்.சி.டி. ஸ்கிரீனில் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், ஐபோன் ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் ஓடிஎல்டி ஸ்கிரீனில் வெளியாகி உள்ளன. ஐபோன்-11ல் 2 லென்ஸ்கள் உள்ள நிலையில், புரோ மற்றும் புரோ மேக்ஸ் போன்களில் 3 விதமான லென்ஸ்கள் இடம் பெற்றுள்ளன. இதனால் வைட், அல்ட்ரா வைட், ஜூம் போன்றவற்றில் படம் பிடிக்க முடியும்.

ஐபோன்-11 மாடல் இந்தியாவில் அனைத்து வரிகளையும் சேர்த்து 65 ஆயிரம் ரூபாய்க்குள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய வரி விதிப்புகளால் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டைவிட 50 டாலர்கள் விலை குறைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் வருகிற 27ந் தேதி இந்த மாடல் போன்கள் விற்பனைக்கு வருகின்றன.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news