Inandoutcinema - Tamil cinema news

பிரம்மாண்ட சாதனை படைத்த காலா படத்தின் சிங்கிள் ட்ராக்

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தின் ‘‘செம்ம வெயிட்டு’’ பாடல் யூடியூபில் ரிலீஸ் ஆகி ஹிட் அடித்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கும் ‘காலா’ படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரித்திருக்கிறார். லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் படத்தை வெளியிட இருக்கிறது. கபாலி திரைப்படத்திற்கு பிறகு ரஜினியும் ரஞ்சித்தும் இணையும் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை காலா படம் பெற்றுள்ளது.

ரஜினி நடித்த காலா படம் வருகிற ஜூன் 7ம் தேதி, உலகெங்கும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகிறது என நடிகர் தனுஷ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். அதை தொடர்ந்து காலா படத்தின் இசை வெளியீடு மே 9 அன்று, எனவும் தனுஷ் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் மே தினத்தை முன்னிட்டு நேற்று காலா படத்தின் சிங்கள் பாடலான ‘‘செம்ம வெயிட்டு’’ வெளியாகும் என்றும் அறிவித்தார். அதன்படி காலா படத்தில் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் காலா படத்தின் சிங்கிள் டிராக் வெளியாகி தற்போது வரை 10 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news