பிப்ரவரியில் மோதும் பெரிய ஹீரோக்கள் – யாருக்கு பலம்

இந்த வருடம் பிப்ரவரி மாதம் 18 படங்கள் ரிலீசாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் முக்கியமாக சிம்பு நடிக்கும் வந்தா ராஜாவாதான் வருவேன், கார்த்தி நடிக்கும் தேவ் படங்களும் இருக்கின்றன.

ஜனவரி மாதம் முழுவதையும் பேட்ட, விஸ்வாசம் கைப்பற்றி கொண்டதை தொடர்ந்து ரிலீஸிற்கு காத்திருக்கும் படங்கள் அதிகமாகி விட்டன. மார்ச் மாதம் பள்ளி தேர்வுகள் நடக்கும் என்பதால் ரிலீஸ் செய்ய இருக்கும் படங்களுக்கு நடுவே போட்டி ஏற்பட்டுள்ளது.

அதில் குறிப்பாக வந்தா ராஜாவாதான் வருவேன், தேவ் இரண்டு படங்களுக்குள் கடும் போட்டி ஏற்படும் என்று தெரிகிறது. அதோடு மட்டும் அல்லாமல் ஜிவி பிரகாஷ் நடிக்கும் சர்வம் தாள மயம், 100% காதல், அய்ங்கரன் ஆகிய மூன்று படங்களும் ரிலீஸ் ஆக இருக்கிறது.

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் கண்ணே கலைமானே, விமல் நடிக்கும் களவாணி-2, அதர்வா நடிக்கும் பூமராங்க், சேரனின் திருமணம், விக்ரமின் மகன் நடிக்கும் வர்மா என அனைத்து படங்களும் தியேட்டர்களை பிடிக்கும் போட்டியில் இறங்கியுள்ளன.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news