September 23, 2018
Inandoutcinema - Tamil cinema news

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் டீசெர் வெளியீடு. அதிகாரபூர்வ அறிவிப்பு

கடந்தாண்டு தமிழ்த் தொலைக்காட்சி உலகில் அதிகம் வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியில் ஓவியா, வையாபுரி உள்ளிட்ட சினிமாவில் வாய்ப்பில்லாதவர்களே அதிகம் இடம்பிடித்திருந்தனர். ஆனாலும் ஷோ பிக் அப் ஆகி, `ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’, `ஓவியா ஆர்மி’, `ட்ரிகர் பண்றாங்க’, `நீங்க ஷட் அப் பண்ணுங்க’, முட்டை எப்படிடா காணாமப் போச்சு’ போன்ற வார்த்தைகள் வைரலாகின. ஹிட் ஆனா படம் மட்டும் இல்ல ரியாலிட்டி ஷோவும் வெர்ஷன் 2 வருவது சகஜம் தான். அந்த வகையில் இதோ பிக்பாஸ் 2 தயாராகி விட்டது. ஜூன் இரண்டாவது வாரத்தில் ஷோ தொடங்கப்படவிருக்கிற நிலையில் அதற்கான டீசர் இன்று வெளியிடப்படவுள்ளது என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் கமல்ஹாசனே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிடவிருக்கிறார். இதனால் ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியின் டீசெர்க்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இன்று மாலை 5 மணிக்கு டீசெர் வருவது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news