September 21, 2018
Inandoutcinema - Tamil cinema news

பல சர்ச்சைகளை கடந்து இத்தனை திரையரங்கில் காலா வெளியாகிறதா ? விவரம் உள்ளே

காலா’ படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என கர்நாடக திரைப்பட வர்த்தக சபையினர் தெரிவித்துள்ளனர். இதனால் காலா திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவதில் உள்ள பிரச்சனை நீடித்து வருகிறது. இதனால் ரஜினியும் அவரது ரசிகர்களும் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர். இன்னிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினி, காவிரி விவகாரத்தில் நான் கருத்து தெரிவித்ததற்காக படத்தை வெளியிடாமல் இருப்பது சரியல்ல.

முதல்வர் குமாரசாமி உரிய பாதுகாப்பு வழங்குவார் என நம்புகிறேன் என நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார். இந்நிலையில் காலா படத்தை கர்நாடகாவில் சி நிறுவனம் வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். மேலும் கர்நாடகாவில் 130 தியேட்டர்களில் வெளியிட திட்டம் இருப்பதாகவும் சி நிறுவன உரிமையாளர் கனகபுரா சீனிவாஸ் அறிவித்துள்ளார்கள். விரைவில் அதற்கான அறிவிப்புகள் வெளிவரும் என அதிர்ப்பார்க்கப்படுகிறது.

எத்தனை திரையரங்குகள் என்ற எண்ணிக்கை, சில மணி நேரங்களில் தெரிந்துவிடும் என நெருங்கிய திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் சில அமைப்புகள் படத்தை வெளியிட விடமாட்டோம் மிரட்டல் விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news