September 20, 2018
Inandoutcinema - Tamil cinema news

நடிகை கீர்த்தி சுரேஷை பாராட்டிய பிரபல நடிகர். மகிழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ்

இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் மறைந்த முன்னாள் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை திரைப்படமாக உருவாகி வருகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது. சாவித்ரியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் படத்திற்கு தமிழில் நடிகையர் திலகம் என்றும் தெலுங்கில் மகாநதி என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதில் சாவித்ரி வேடத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். நடிகையர் திலகம் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேர்பை பெற்று வருகிறது. ஜெமினிகணேசனை திருமணம் செய்து அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து மதுவுக்கு அடிமையாகி கோமாவில் சிக்கி இறந்ததையும் படத்தில் காட்சி படுத்தி உள்ளனர். இந்த படத்தை தமிழ், பிரபலங்களுக்கு பிரத்யேகமாக திரையிட்டு காட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் படத்தை பார்த்து கீர்த்தி சுரேஷை பாராட்டி உள்ளார். சாவித்திரியின் களத்தூர் கண்ணம்மா படத்தில்தான் கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து கீர்த்தி சுரேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில், கமல்ஹாசனிடம் பாராட்டும், ஆசிர்வாதமும் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இதை எனக்கு கிடைத்த அதிர்ஷ்டமாக கருதுகிறேன். அவருக்கு நன்றி என் நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்து உள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news