நடிகர் கமல் ஹாசன் மக்கள் நீதி மைய்யத்தை தொடங்கியதில் இருந்து மக்களை கவர்வதற்காக தனது கருத்துக்களை பகிரங்கமாக தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் கூட இதுவரை லோக் ஆயுக்தா தவறிய ஆளுவோருக்கு இது அவமானம் என்றும், நமக்கு இது வெகுமானம் என்றும், ஊழல் என்னும் பிணியை கட்டுப்படுத்தும் மருந்துகளில் ஒன்று லோக் ஆயுக்தா. தாமதிக்காமல் மேல்முறையீடு செய்யாமல் லோக் ஆயுக்தாவை அமைக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும். ஊழலில் ஊறித் திளைத்தவர்களே, ஊழலுக்கு எதிரான லோக் ஆயூக்தா அமைப்பை உருவாக்க நேர்ந்தது, நீதியின் விளையாட்டு. இவர்களது செயல்களை உச்சநீதிமன்றமும் மக்களும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் கூறினார். இந்நிலையில் வரும் 30 தேதி நடிகர் கமல் ஹாசன், மய்யம் விசில் என்ற செயலியை அறிமுகப்படுத்தவிருக்கிறார். கமலின் இந்த புதிய முயற்சிக்கு அவரது ரசிகர்கள் பெருமளவில் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.