September 22, 2018
Inandoutcinema - Tamil cinema news

தோணிக்காக விட்டு கொடுத்த ரெய்னா. உலக சாதனையை படைப்பாரா ?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி அட்டகாரரான நம்ம சின்ன தல ரெய்னா, ஐபிஎல் வரலாற்றில் யாருமே செய்யாத பல மகத்தான சாதனையை செய்துள்ளார். அணியின் வெற்றிக்கு தனது பங்களிப்பப்பை சீரான வண்ணம் கொடுத்துவருகிறார். நம்ம சின்னதல ரெய்னா நேற்றைய போட்டியில் 19 வது ஓவரில் 2 சிக்ஸர், 2 பௌண்டரிகளுடன் சேர்த்து 5 பந்தில் 22 ரன்கள் எடுத்து ஆட்டத்தை சமனில் கொண்டுவந்தார். அடுத்த பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றிக்கான ரன்னை அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த பாலில் ரன் அடிக்காமல் தோனிக்கு வாய்ப்பளித்தார்.

தோனிக்கு வாய்ப்பளித்த ரெய்னாவை தோணி ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அவர்களது நட்பை பார்த்த பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். நேற்றைய போட்டியில் தோணி ஐபிஎல் போட்டியில் 4000 ரன்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை நடந்து முடிந்த 11 ஐபிஎல் தொடர்களிலும் 350 ரன்களை கடந்த ஒரே வீரர் சுரேஷ் ரெய்னா மட்டும்தான். அவர் 8 முறை 400 ரங்களுக்கு அதிகமாகவும் மற்றும் மூன்று முறை 500 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு ஐபிஎல் தொடரில் அவரது குறைந்த பட்ச ஸ்கோர் 374 ஆகும். இந்த முறையும் 400 ரங்களுக்கு மெல் அடிப்பதற்க்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறது. ஏனெனில் அவர் இதுவரை 391 ரன்கள் குவித்துள்ளார். ஐபிஎலில் ஒரு தொடரில் 10 சிக்சருக்கு குறையாமல் 11 தொடர்களிலும் சிக்ஸர் நடித்துள்ளவர் சுரேஷ் ரெய்னா. மேலும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் 150 கேட்சுகள் பிடித்த ஒரே இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா மட்டுமே. இன்னும் 69 ரன்கள் அடித்தால் ஐபிஎல் வரலாற்றிலேயே 5000 ரங்கன் கடந்த முதல் வீரர் என்ற பெருமையை சுரேஷ் ரெய்னா பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனாலேயே சுரேஷ் ரெய்னாவை ஐபிஎல் லெஜண்ட் என கூறுகிறார்கள்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news