Inandoutcinema - Tamil cinema news

தூத்துக்குடி விமான நிலையம் முதல் அரசு மருத்துவமனை வரை உற்சாக வரவேற்பு – #RajiniInThoothukudi புகைப்படங்கள்

சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 22ம் தேதி அம்மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க சென்ற பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயமடைந்து மருத்த்வமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூற தூத்துக்குடி சென்றார். முன்னதாக தூத்துக்குடி விமானம் மூலம் சென்ற நடிகர் ரஜினிகாந்த்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

வழிநெடுக்க சாலையில் ரஜினியின் மக்கள் மன்ற நிர்வாகிகள் நின்றுகொண்டு அவரை வரவேற்றனர். ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்துகொண்டனர்.  அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதோ உங்களுக்காக

 

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news