September 24, 2018
Inandoutcinema - Tamil cinema news

தூத்துக்குடி மக்களிடம் வேண்டுகோல் வைத்த விஜய். ரசிகரின் செல்போனை பிடுங்கிய விஜய்

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இறந்த 13 பேரில் 10 பேரின் குடும்பங்களுக்கும் நேற்று இரவில் நடிகர் விஜய் நேரில் சென்று ஆறுதல் கூறிவிட்டு ரூ.1 லட்சம் இழப்பீடும் வழங்கியுள்ளார். இது பற்றி விஜய் ரசிகர் ஒருவர் பிரபல நாளிதழுக்கு கூறியதாவது : விஜய்யோட வருகை யாருக்கும் தெரியாது. தூத்துக்குடிக்கு வந்த விஜய் அங்கிருந்து முத்துக்குட்டி என்ற விஜய் மக்கள் இயக்க நிர்வாகியின் வீட்டுக்குச் சென்றோம்.

விஜய்யைப் பார்த்த முத்துக்குட்டி, சந்தோஷத்தில் அவரது செல்போனில் படம்பிடிக்க முயன்றார். அப்போது செல்போனைப் பிடுங்கி, நான் சினிமா சூட்டிங்குக்கு வரலை. துக்கம் நடந்த வீட்டுக்கு ஆறுதல் சொல்ல வந்திருக்கேன். செல்போனில் படம் ஏதும் எடுக்கக் கூடாது எனச் சொல்லி, செல்போனை மன்ற நிர்வாகிகளிடம் கொடுத்தார். பின்னர் அணைத்து வீடுகளுக்கு காரில் சென்று தெரு முனையில் காரை நிறுத்தி சத்தமில்லாமல் சென்று வந்தோம்.

யாரும் படம் எடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் விஜய். ஆனால், ஸ்னோலினின் வீட்டில் விஜய்க்குத் தெரியாமல் எடுக்கப்பட்ட 35 செகண்ட் வீடியோவும் படமும் இரவிலேயே வாட்ஸ் அப்-களில் பரவி வைரலாகிவிட்டது. 10 பேர் வீடுகளிலும் விஜய் முதலில் சொன்னது, யாரும் படம் எடுக்க வேண்டாம் ப்ளீஸ் என்பதுதான். 13 பேரில் 10 பேர் குடும்பத்தைச் சந்தித்துவிட்டேன். மீதமுள்ள வீடுகளுக்குச் செல்ல முடியவில்லை.

அந்த 3 வீடுகளுக்கும் போகணும் எனச் சொன்னார் விஜய். முத்துக்குட்டியிடம் பறிக்கப்பட்ட செல்போனை மதுரைக்குக் கிளம்ப காரில் ஏறிய பிறகே கொடுக்கச் சொன்னார் என என விஜய் ரசிகர் ஒருவர் பிரபல நாளிதழுக்கு பதிலளித்துள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news