‘திரெளபதி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு…

சமீபத்தில் ‘திரெளபதி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியானதில் இருந்தே சர்ச்சைக்கும் பஞ்சமில்லாத இந்த படம் வரும் 28ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இயக்குனர் ஜி.,மோகன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

திரெளபதி’ படத்தின் தணிக்கைப் பணிகள் முடிவடைந்துவிட்டதாகவும், இதனை தொடர்ந்து விரைவில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி, படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கவுள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இந்த படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைத்துவிட்டதாகவும் தணிக்கை அதிகாரிகள் இந்த படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளதாகவும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ரிச்சர்ட், ஷீலா, கருணாஸ், நிஷாந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘திரெளபதி’ படத்தை மோகன்.ஜி தயாரித்து இயக்கியுள்ளார் . மனோஜ் நாராயண் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஜுபின் இசையமைத்துள்ளார்.

 கடந்த ஜனவரி 3-ம் தேதி இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியானதில் இருந்தே இணையத்தில் இந்த படத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிடைத்த நிலையில் இந்த படத்தின் ரிலீசுக்கு எதிர்ப்பு கிளம்புமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news