தாராள பிரபு படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு…

ஹரிஷ் கல்யாண் நடித்த தாராள பிரபு திரைப்படம் கடந்த மார்ச் 13 ஆம் தேதி வெளியாகியிருந்தது. இந்தியில் வெளியான ‘விக்கி டோனர்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக இதனை கிருஷ்ணா மாரிமுத்து இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக தான்யா ஹோப் நடிக்க, விவேக் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் பாடல்களுக்கு அனிருத், பரத் சங்கர், இன்னோ கெங்கா, கபேர் வாசுகி, ஷான் ரோல்டன், விவேக் – மெர்வின் உள்ளிட்ட பலர் இசையமைத்தனர். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருந்த நிலையில், ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டதன் காரணமாக படத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

ஊரடங்கு முடிந்த பிறகு இந்த படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்பட்டநிலையில் தற்போது புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் படி இந்த படத்தை அமேசான் பிரைமில் வருகிற ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியிட இருக்கிறார்கள்.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news