September 22, 2018
Inandoutcinema - Tamil cinema news

தளபதி குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வர அடுத்த ஆள் ரெடி

சென்னை: நடிகர்கள் தங்களது பிள்ளைகளை மேல் படிப்புக்காக வெளிநாட்டிற்கு அனுப்புவது வழக்கம். இந்த பட்டியலில் லெட்டஸ்டாக இணைந்திருப்பவர் நடிகர் விஜயின் மகன் சஞ்சய்.

நடிகர் விஜய் மகன் சஞ்சய் சென்னை தரமணியில் உள்ள அமெரிக்கன் இண்டர்நேஷனல் பள்ளியில் படித்து வந்தார். சமீபத்தில் நடந்து முடிந்த 12ம் வகுப்பு தேர்வில் அவர் 1200க்கு 1079 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். இதையடுத்து அவர் மேல் படிப்புகாக கனடா நாடு செல்லவிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.

மகனின் படிப்பில் எப்போதுமே தலையிடாத விஜய் தற்போது அவரது எதிர்காலத்தை தீர்மானிக்கும் முடிவையும் அவரிடமே விட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

கனடா செல்லும் சஞ்சய் அங்குள்ள ஒரு பிரபல பல்கலைக்கழகத்தில் சினிமா தயாரிப்பு சம்பந்தப்பட்ட படிப்பு சேரவிருப்பதாகவுள்ளார். ஒரு பக்கம் அப்பா விஜய் தமிழ் சினிமாவில் கலக்கி வரும் நிலையில் அவரது மகனும் சினிமா துறையே தேர்வு செய்துள்ளது படிப்பு முடித்து விரைவில் சஞ்சய் சினிமாவில் ஒரு வலம் வருவர வாய்ப்புள்ளது இப்போதே தெரிகிறது.

சன் பிக்‌சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தலபதி 62 படத்தின் தலைப்பு மற்றும் முதல் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியாக உள்ள நிலையில், விஜய் மகன் குறிந்த இந்த தகவல் அவரது ரசிகர்களை மேலும் உற்சாக படுத்தி உள்ளது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news