September 26, 2018
Inandoutcinema - Tamil cinema news

தல ரசிகர்களின் விமர்சனத்துக்கு ஆளான நடிகர் விஷால். விவரம் உள்ளே

நடிகர் விஷால் அடிக்கடி ஏதேனும் ஒரு சர்ச்சைகளில் சிக்கிவிடுகிறார். வெளிநாடுகளில் கலைநிகழ்ச்சி நடத்துவது, ஆர்.கே நகர் தொகுதியில் போட்டியிட முயற்சித்து சொதப்புவது, விவசாயிகளுக்கு ஆதரவாக பேசுவது, பின்னர் விவசாய அழிவுக்கு முக்கிய காரணமாக இருந்து வரும், நிலத்தடி நீரை உறிஞ்சி குடிக்கும் குளிர்பான விளம்பரங்களில் நடிப்பது போன்ற பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.

இவர் கடைசியாக எடுத்த முடிவால் தமிழ் சினிமாவே ஒன்றரை மாதமாக முடங்கி போனது. இது அனைத்தும் சரியாக வேண்டும் என்றால் ஏதாவது ஒரு பெரிய நடிகரின் படம் திரைக்கு வந்தால் தான் சரியாகும் நிலைமை என தியேட்டர் உரிமையாளர்கள் கூறுகிறார்கள். இந்த நிலையில் பிரபல வார இதழுக்கு பேட்டியளித்த விஷால் அஜித்தை பற்றி பேசியுள்ளார். அப்போது நடிகர் விஷால் கூறியதாவது : தல அஜித்தை என்னால் தொடர்பு கொள்ளவே முடியவில்லை. அவரின் மேனஜேர் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று, அவரை முயற்சித்து பார்த்தாலும் முடியவில்லை என்று நடிகர் விஷால் கூறியுள்ளார். இது அஜித் ரசிகர்களிடையே கோபத்தை உண்டாகியுள்ளது. மேலும் அஜித் கலைநிகழ்ச்சி போற்றவற்றை தவிர்ப்பது அவரின் தனிப்பட்ட விஷயம்,ஆனால் சினிமா நலனுக்காக தவிர்க்க முடியாத முடிவுக்கு கூட அஜித் கலந்து கொள்ளாதது மிகவும் வருத்தத்தை தருகிறது எனவும் கூறியுள்ளார். இதனால் தல ரசிகர்கள் நடிகர் விஷால் மீது கடும் கோபத்தில் உள்ளார்கள். மேலும் சமூக வலைத்தளத்தில் நடிகர் விஷாலை கண்டமேனிக்கு விமர்சித்தும் வருகின்றனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news