Inandoutcinema - Tamil cinema news

சூர்யாவுடன் கேவி ஆனந்த் படத்தில் இணையம் பிரபல நடிகர். அதிகாரபூர்வ அறிவிப்பு

கே.வி.ஆனந்த் இயக்கவுள்ள படத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளார், இது சூர்யாவின் கேரியரில் 37 வது படமாக அமைந்துள்ளது. அதேபோல் நடிகர் சூர்யா கே.வி.ஆனந்த் கூட்டணியில் அயன் ,மாற்றான் ஆகிய 2 வெற்றி படங்கள் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னும் பெயரிடபடாத இந்த படத்தை லைகா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது.

 படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் மிக வேகமாக நடந்துவருகிறது. இந்த நிலையில் படத்தில் பணியாற்ற இருக்கும் டெக்னீஷியன் பட்டியலை கே.வி.ஆனந்த் அவரது டிவிட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். கேவ்மிக் யு ஆரி ஒளிப்பதிவு செய்யவுள்ளார். மேலும் பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதுகிறார். கிரண் கலை இயக்குநராக இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சூர்யா, செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே என்கிற படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக இயக்குநர் கே.வி. ஆனந்துடன் மீண்டும் இணைய உள்ளார். இந்தப் படத்தில் சூர்யாவுடன் சேர்ந்து மோகன்லால் நடிக்கவுள்ளதாக கே.வி. ஆனந்த் தெரிவித்துள்ளார். இதனால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் இந்த படத்தில் மோகன்லால் நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news