சூரி வாழ்க்கையில் விளையாடும் கொரோனா..

இயக்குனர் வெற்றி மாறன் தமிழ் சினிமாவிற்கு பல சிறந்த திரைப்படங்களை கொடுத்துள்ளார். இவர் இயக்கத்தில் வெளியான வடசென்னை மற்றும் அசுரன் திரைப்படம் மிக பெரிய வெற்றியடைந்தது. அதனை தொடர்ந்து இவர் நடிகர் சூரியை வைத்து ஒரு படம் இயக்கப்போவதாவும், அதன்பின் நடிகர் சூர்யாவை வைத்து வாடிவாசல் எனும் நாவலை தழுவி திரைப்படத்தை இயக்குவுள்ளதாகவும் தகவல் வெளியானது.

முதலில் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் ஒரு கவிதையை மையமாக வைத்து, இந்தப் படத்தை உருவாக்கத் திட்டமிட்டனர். அத்திட்டம் கைவிடப்பட்டு, மீரான் மைதீன் எழுதிய ’அஜ்னபி’ என்ற நாவலை மையமாகக் கொண்ட கதைக்களத்தை உருவாக்கும் வேலையில் இறங்கினர்.

மேலும், அப்படத்தை ஓமன், கத்தார், சவுதி ஆகிய இடங்களில் படமாக்கத் திட்டமிட்டனர். படப்பிடிப்புக்குப் புறப்படலாம் என்கிற நிலையில் கரோனா அச்சுறுத்தல் வீரியமானதால் அந்த முயற்சியையும் கைவிட்டனர். மேலும் இந்தியாவிலேயே படப்பிடிப்பை நடத்தும் வகையில் ஒரு கதைக்களத்தை உருவாக்கும் பணியில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இதுவும் நாவலை அடிப்படையாகக் கொண்டதா என்பது விரைவில் தெரியவரும்.

சூரி படத்தை முடித்தவுடன்தான், சூர்யா நடிக்கவுள்ள ‘வாடிவாசல்’ படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படம் ‘வாடிவாசல்’ நாவலைத் தழுவி எடுக்கப்படும் படமாகும். ‘அசுரன்’ படத்தைத் தயாரித்த தாணுவே, இந்தப் படத்தையும் தயாரிக்கவுள்ளார்.

தற்போது இந்த கதையையும் மாற்றி புதிதாக ஒரு கதையில் நடிகர் சூரி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news