தமிழசினிமாவில் வந்த பல சூப்பர்ஹிட் படங்களை கலாய்த்து எடுக்கப்பட்ட படம் தான் தமிழ் படம். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தமிழ்படம் 2.0 என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. தற்போது இந்த படத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. பெயர் மாற்றத்திற்க்கான விளக்கமும் படக்குழுவின் சார்பாக தெரிவவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சுழியத்திற்கு மதிப்பு இல்லை என கருத்து தெரிவித்துள்ளார். அதனால் 2.0 என்பதில் 0வை நீக்கிவிட்டு தமிழ்படம் 2 என்பது தான் இனிமேல் படத்தின் பெயர் என கூறியுள்ளனர். இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.