சென்னை: நார்வேயில் நடந்த தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த சமூக விழிப்புணர்வு படமாக சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் நடித்து, மோகன்ராஜா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான வேலைக்காரன் படம் சாமானிய மக்களின் பிரச்னைகளையும், கார்ப்ரேட்களின் பின்னணியையும் வெளிச்சம் போட்டு காட்டி மக்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
மோகன் ராஜாவின் இந்த முயற்சிக்கு தமிழ்நாட்டில் மட்டுமின்றி தற்போது நார்வேயிலும் அங்கீகாரம் கிடைந்துள்ளது. சமீபத்தில் நார்வே நாட்டில் நடந்த தமிழ் திரைப்பட விழாவில் வேலைக்காரன் படத்துக்காக இயக்குனர் மோகன் ராஜாவுக்கு ‘சிறந்த சமூக விழிப்புணர்வு படம்’ என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.
தமிழில் வெளியாகும் படங்கள் உலக அளவில் அங்கிகரிக்கப்பட்டு வரும் நிலையில் ‘வேலைக்காரன் படத்துக்கு கிடைத்துள்ள இந்த விருது இன்னும் இது போன்ற நல்ல படைப்புகளை தயாரிக்க எங்களை ஊக்குவிக்கும்’ என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.