கே.ஜி.எப் 2 நியூ லுக் போஸ்டர் ரிலீஸ்!

2018ம் ஆண்டு வெளியான இப்படம் பல விருதுகளை குவித்து கன்னட சினிமா உலகை பெருமையில் ஆழ்த்தியது. இந்த படத்திற்கு பிறகு இந்த படத்தில் தனது அற்புதமான நடிப்பினை வெளிப்படுத்திய நடிகர் யாஷ்  ராக்கிங் ஸ்டார் என்று என்று பெருமையோடு அழைக்கப்பட்டு இந்திய சினிமாவுலகில் பரவலான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார். கன்னட சினிமாவில் முதன் முறையாக 100 கோடி வசூல் ஈட்டி இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த கே.ஜி.எஃப் திரைப்படத்திற்கு சென்ற ஆண்டின் சிறந்த சண்டை காட்சி மற்றும் சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்டிற்கான  தேசிய விருது பெற்றது.

  கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி என 5 மொழிகளில் வெளிவந்த இப்படம் பல்வேறு வெற்றிகளை குவித்தது.  அதையடுத்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பக்கம் தற்போது உருவாகி வருகிறது. இப்படத்தின் பூஜை சமீபத்தில் துவங்கப்பட்டு படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் சற்றுமுன் இப்படத்தின் நியூ லுக் போஸ்டர் ஒன்று அய்யப்ப ஷர்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news