கீர்த்தி சுரேஷுக்காக இணையும் 4 முன்னணி நடிகைகள்

கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் ‘பெண்குயின்’. ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கீர்த்தி சுரேஷ் கர்ப்பிணி பெண் வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் 19-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது. இதையொட்டி இப்படத்தின் டீசர் இன்று பிற்பகல் 12 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.

டீசரை யார் யார் வெளியிடப்போகிறார்கள் என்பது குறித்த அறிவிப்பை நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ளார். இது பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்பதால், பல்வேறு திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகைகளை கொண்டு டீசரை வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதன்படி நடிகைகள் திரிஷா, மஞ்சு வாரியர், சமந்தா, டாப்சி ஆகியோர் பெண்குயின் பட டீசரை வெளியிட உள்ளனர்.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news