கிரிக்கெட் வீரரை மணக்கும் பாலிவுட் நடிகை

பிரபல பாலிவுட் நடிகை நடாஷா. செர்பியா நாட்டைச் சேர்ந்த இவர் பாலிவுட் படங்களில் நடிப்பதற்காக இந்தியா வந்து செட்டிலானார். விளம்பரப் படங்களில் நடித்து புகழ் பெற்றவர், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். அதன் பிறகு சத்யாகிரஹா என்ற படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார். தமிழில் வெளிவந்த அரிமா நம்பி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார்.

நடாஷாவும், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஹர்த்திக் பாண்ட்யாவும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் பாண்ட்யாவும், நடாஷாவும் துபாயில் மோதிரம் மாற்றி திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். சொகுசுப் படகில் பயணம் செய்துகொண்டே அவர்கள் மோதிரம் மாற்றிக் கொண்ட வீடியோவை ஹர்திக் பாண்டே வெளியிட்டுள்ளார் . இவர்களை கிரிக்கெட் வீரர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்தினர்

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news