September 25, 2018
Inandoutcinema - Tamil cinema news

கிரிக்கெட்டின் கடவுளுக்கு இன்று 45 பிறந்தநாள். பிரபலங்கள் வாழ்த்து

இந்திய கிரிக்கெட் அணியின் துருப்பு சீட்டு, லிட்டில் மாஸ்டர், கிரிக்கெட் ஜாம்பவான், என எண்ணற்ற பெயர்களால் அழைக்கப்படும் கிரிக்கெட் வீரர்தான் சச்சின் டெண்டுல்கர். சச்சின் சாதனைகளை என்ன நினைத்தால் கண்டிப்பாக கணிதமேதை தேவைப்படும்.

இன்றைக்கு இந்திய அணியின் நம்பிக்கையாக விளங்கும் விராட் கோலி, தோணி உள்ளிட்ட பல வீரர்கள் கிரிக்கெட்டில் கால் பதிக்க முக்கிய காரணம் சச்சின். மேலும் கிரிக்கெட்டின் பிதாமகன் என்று வர்ணிக்கப்படும் டான் பிராட்மன், சச்சின் டெண்டுல்கருக்கு பேட்டை பரிசாக வழங்கி சச்சினின் ஆட்டம் எனது ஆட்டத்தை போல் இருக்கிறது என கூறினார். சச்சின் 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலும் ஓய்வு பெற்றார். சச்சின் ஒய்வு பெற்றாலும், அவரது ரசிகர்கள் அணு அளவும் குறையவில்லை என்பது நிதர்சனமான உண்மை. அதற்க்கு சமீபத்தில் நடந்த ஐபில் போட்டியில் சென்னை ரசிகர்களை தாண்டி சச்சின், சச்சின் என மைதானத்தில் கோஷமிட்டது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட்டின் கடவுளுக்கு இன்று 45 வயதாகிறது. சச்சின் தெண்டுல்கர் பிறந்த நாளை  முன்னிட்டு அவருக்கு  வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. உலகம் முழுவதும் உள்ள  அவரது ரசிகர்கள் விளையாட்டு வீரர்கள் முக்கிய பிரமுகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். INANDOUT  CINEMA சார்பாக கிரிக்கெட் கடவுளான சச்சின் டெண்டுல்கருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news