காவி ஆவி நடுவுல தேவி.. கவர்ச்சி நடிகைகளுடன் யோகி பாபு!?

காவி ஆவி நடுவுல தேவி என்ற படத்தை மனோன்ஸ் சினி கம்பைன்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தில் “யோகி பாபுவுக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிக்கும் நான்கு பேர் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளனர். அது மட்டுமல்லாமல் புதுமுக கவர்ச்சி நடிகைகளுடன் ” இந்திரன் கெட்டதும் பிகராலே சந்திரன் கெட்டதும் பிகராலே மந்திரி கெட்டதும் பிகராலே” என்ற குத்து பாட்டுக்கு தாறுமாறாக குத்தாட்டமும் போட்டிருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் வரும் பிகரா சுகரா என்ற கேள்விக்கான விடையில் யோகி பாபுவும், தம்பி ராமையாவும் போட்டா போட்டி போட்டு நடித்துள்ளனர்.

இந்த அருமையான காட்சி படமாக்கப்பட்ட போதே படக்குழுவினர் அனைவரும் வயிறு வலிக்க சிரித்தனர். இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் அனைத்தும் முடிந்து, மேற்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், புதுமுகம் ராம் சுந்தர், பிரியங்கா, தம்பி ராமையா, நான் கடவுள் ராஜந்திரன், இமான் அண்ணாச்சி, வேல் சிவா, டக்ளாராமு, சிவசங்கர், ரிஷா, சிவராஜ் என முக்கிய நடிகர்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news