Inandoutcinema - Tamil cinema news

கார்த்திக் சுப்ராஜ் படத்தில் நடிக்க துவங்கிய ரஜினி. புகைப்படம் உள்ளே

ரஜினிகாந்த் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கும் ‘காலா’ படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரித்திருக்கிறார். லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் படத்தை வெளியிட இருக்கிறது. கபாலி திரைப்படத்திற்கு பிறகு ரஜினியும் ரஞ்சித்தும் இணையும் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ள படம் காலா.

அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக காலா இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ளது. வெளியானது முதல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை பார்த்த திரை பிரபலங்கள் பலரும் அவரது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இன்னிலையில் நடிகர் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்ராஜ் இயக்கும் அடுத்த படத்தில் நடிப்பதற்காக நேற்று டார்ஜிலிங் புறப்பட்டு சென்றார்.

தற்போது டார்ஜிலிங்ல் படக்குழுவினருடன் ரஜினி உள்ள புகைப்படத்தை சன் பிச்சர்ஸ் வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிவருவது குறிப்பிடத்தக்கது. இன்று முதல் ஒரு மாத வரை நடிகர் ரஜினி முதல் கட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என கூறப்படுகிறது

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news