கிட்ட தட்ட இரண்டு வருடம் கழித்து மீணடும் மன்னர் வகையறா படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார் நடிகர் விமல். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படங்கள் சரியாக போகவில்லை. தரமான கதைக்காக காத்திருந்த விமலுக்கு மன்னர் வகையறா படம் திருப்பு முனையாக அமைந்தது. கடந்த மாதம் விமல் நடித்த ‘மன்னர் வகையறா’ படம் வெளியாகி 25 நாட்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. கடந்த ஒன்றரை மாதமாக நடைபெற்றுவந்த வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்த நிலையில் தற்போது ’களவாணி-2’, படத்தின் படப்பிடிப்பு வரும் மே-3ஆம் தேதி முதல் மீண்டும் முழுவீச்சில் துவங்குகிறது. இந்த வேலை நிறுத்தம் சமயத்தில் கிடைத்த இந்த 3௦ நாட்கள் தான் விமலுக்கு கிடைத்த ஒய்வு நாட்கள்.. ஆம்.. இனி வரும் நாட்களில் ஓய்வில்லாமல் அடுத்தடுத்த படங்களில் நடிக்க தயாராகிவிட்டார் விமல்.