September 26, 2018
Inandoutcinema - Tamil cinema news

கம்பீர் விலகியதால் முதல் சவாலை சந்திக்கவிருக்கும் ஸ்ரேயஸ் அய்யர்.

டெல்லி அணியை பொறுத்தமட்டில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு ஒருசேர சிறப்பாக அமையாமல்  தவித்து வருகிறது. மோசமான பார்ம் காரணமாக ரன் எடுக்க முடியாமல் திணறியதால் கேப்டன் பதவியில் இருந்து விலகிய கம்பீர், ஸ்ரேயஸ் அய்யர் கேப்டன் பொறுப்பேற்க பரிந்துரை செய்தார். ஐ.பி.எல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி இதுவரை 6 ஆட்டத்தில் விளையாடி ஒன்றில் மட்டும் (மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக) வெற்றி பெற்றது.

மற்ற 5 ஆட்டங்களில் தோல்வி கண்டு புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. மோசமான தோல்விக்கு பொறுப்பு ஏற்று டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து அனுபவமிக்க கவுதம் கம்பீர் விலகினார். புதிய கேப்டனாக இளம் வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தலைமையில் டெல்லி அணி சந்திக்கும் முதல் போட்டி இதுவாகும். டெல்லி அணி ‘பிளே–ஆப்’ சுற்றுக்கான வாய்ப்பில் இருக்க வேண்டும் என்றால் தனது எஞ்சிய 8 லீக் ஆட்டங்களில் 7–ல் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது. இதனால் இளம் வீரரான ஸ்ரேயஸ் அய்யருக்கு முதல் ஆட்டத்தில் இருந்தே கடும் சவால் காத்திருக்கிறது. இந்த கடும் சவாலை ஸ்ரேயஸ் அய்யர் சமாளிப்பாரா என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. இன்று இரவு பலம் வாய்ந்த கொல்கத்தா அணியுடன் பலபரிட்சை நடத்த உள்ளது டெல்லி. டெல்லி அணிக்கு இந்த ஆட்டம் வாழ்வா சாவா ஆட்டம் என்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news