கமலுடன் மோதும் பாபி சிம்ஹா!!?

கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ஜிகர்தண்டா படத்தில் வில்லனாக நடித்து தேசிய விருது பெற்றவர் பாபி சிம்ஹா. அதன்பிறகு ஹீரோவாகிவிட்டார். ஆனால் அப்படி அவர் நடித்த படங்கள் வெற்றியை கொடுக்காததால் விக்ரமின் சாமி-2 படத்திற்கு பிறகு ஹீரோ-வில்லன் என இரண்டுவிதமான வேடங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன்-2 படத்தில் தற்போது பாபி சிம்ஹா வில்லனாக ஒப்பந்தமாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கமல், காஜல் அகர்வாலைத் தொடர்ந்து கமிட்டான ரகுல் பிரீத் சிங், ஐஸ்வர்யா ராஜேஸ், பிரியா பவானி சங்கர் ஆகியோருடன் பாபி சிம்ஹாவும் இரண்டாம்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ளயிருப்பதாக தெரிகிறது.

இதற்கு முன்பு இந்தியன்-2 படத்தில் வில்லனாக நடிக்க அக்சய்குமார், அஜய்தேவ்கன் ஆகியோர் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில் இப்போது பாபி சிம்ஹா ஒப்பந்தமாகியிருக்கிறார்

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news